Monday, January 20, 2025
HomeTechnologyகலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்ளிகேஷன் Pdf Magalir Urimai Thogai From Download Pdf...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்ளிகேஷன் Pdf Magalir Urimai Thogai From Download Pdf Tamil

ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசால் கூறப்பட்டிருந்தது இந்நிலையில் அதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டிருக்கிறது

மகளிர் உரிமைத் தொகை பெற தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது

    1. ஐந்து ஏக்கர் நிலம் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் இல்லை
    2. ஒரு குடும்ப அட்டையில் உள்ள ஒரு மகளிர்க்கு மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் தொகை வழங்கப்படும்
    3. சொந்தமாக நீங்கள் கார் போன்ற வாகனங்கள் வைத்திருந்தால் இந்த உரிமை தொகை உங்களுக்கு இல்லை
    4. உங்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்கும் மேல் இருந்தால் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய முடியாது
    5. பெண் எம்எல்ஏ மற்றும் அரசு ஊழியராக இருந்தால் ஆயிரம் ரூபாய் கிடையாது
    6. எந்த கடையில் ரேஷன் அட்டை உள்ளதோ அதே கடையில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்
    7. இந்த திட்டத்தின் மூலம் பயனடைய கட்டாயம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும்
    8. இந்த உரிமை தொகையானது நேரடியாக தலைவி வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும்




விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள்

  • இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் நீங்கள் பயன்பெற விரும்பினால் கீழ்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் அதன்படி உங்களது வயது 21 வயதை நிரம்பி இருக்க வேண்டும் அதாவது நீங்கள் செப்டம்பர் 15 2002 தேதிக்கு முன்னால் பிறந்தவராக இருக்க வேண்டும்
  • இந்த திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்ப அட்டையை நீங்கள் முகாமில் கொடுத்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்
  • நீங்கள் நேரடியாக பொது விநியோக நியாய விலை கடைக்குச் சென்று இந்த திட்டத்தை பதிவு செய்து கொள்ளலாம்
  • குடும்பத் தலைவியை எப்படி தேர்ந்தெடுப்பார்கள்
  • குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் குடும்பமாக கருதப்படுவார்கள்
  • குடும்ப அட்டையில் உங்கள் பெயர் இருந்தால் நீங்கள் குடும்பத் தலைவியாக கருதி இந்த திட்டத்தில் பயன்பெற நீங்கள் விண்ணப்பிக்கலாம்
  • குடும்ப அட்டையில் கணவர் பெயர் குடும்பத் தலைவராக இருந்தால் அவரின் மனைவி குடும்பத் தலைவியாக கருதப்படுவார்
  • DOWNLOAD Application Form PDF

  • உங்கள் குடும்ப அட்டையில் 21 வயது நிரம்பிய பெண்கள் பலர் இருந்தால் அதில் ஏதாவது ஒரு பெண்ணை மட்டுமே குடும்ப தலைவராக தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும்

பொருளாதார தகுதிகள் யாவை எவை

  1. குடும்ப தலைவராக இருப்பவர் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  2. உங்கள் குடும்ப சொத்து ஐந்து ஏக்கர் அளவிற்கு அதிகமாக இருக்கக் கூடாது
  3. உங்கள் மின்சார கட்டணம் ஆண்டிற்கு 3800 யூனிட்டிற்கும் குறைவாக பயன்படுத்தி இருக்க வேண்டும்
  4. இந்த பொருளாதார சான்றிதழ்களை நீங்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை வருமானச் சான்று அல்லது நில ஆவணங்கள் கேட்கப்பட மாட்டாது




கட்டாயமாக தகுதி இல்லாதவர்கள் யார்

  1. குடும்பத்தில் ஆண்டு வருமானம் 2 1/2 லட்சத்திற்கு மேல் ஈட்டி நீங்கள் வருமான வரி செலுத்துபவர்கள் என்றால் உங்களுக்கு இந்த திட்டத்தில் பயன்பெற வாய்ப்பே இல்லை
  2. மாநில மத்திய அரசுகளில் வங்கி ஊழியர்கள் ஆகவோ உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டுறவு அமைப்புகளில் ஊழியர்களாகவோ அரசு ஊழியர்களாகவோ இருப்பவர்கள் இந்தத் திட்டத்தின் பயனடைய முடியாது
  3. உங்களிடம் சொந்த பயன்பாட்டுக்காக கார் ஜீப் டிராக்டர் கனராக வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்க்கள் என்றால் இந்தத் திட்டத்தின் மூலம் உங்களுக்குப் பயன் இல்லை
  4. நீங்கள் ஏற்கனவே ஓய்வூதியம் விதைவை ஊதியம் அமைப்பு சாரா தொழில் ஓய்வூதியம் சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியும் அரசிடமிருந்து வேறு எந்த ஓய்வூதியம் பெறுபவராக இருந்தாலும் இந்தத் திட்டத்தில் பயனடைய முடியாது

விதிவிலக்குகள்

மாற்று திறனாளியாக இருந்து நீங்கள் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Pathran on Tamil Tech Central
Md mohan on Tamil Tech Central
Praveen Kumar on Tamil Tech Central
Anitha on Tamil Tech Central
Sujitha on Tamil Tech Central
Vadivel Perumal on Tamil Tech Central
Vadivel Perumal on Tamil Tech Central